சுருக்க திருத்த வாக்காளர் பட்டியல் குறித்த ஆலோசனை கூட்டம்

அரியலூரில் சுருக்க திருத்த வாக்காளர் பட்டியல் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.

Update: 2020-01-08 22:15 GMT
அரியலூர், 

அரியலூரில், மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்தம் தொடர்பாக அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் ரத்னா தலைமையில் நடைபெற்றது. வாக்காளர் பட்டியலுக்கான பார்வையாளரும், பதிவுத்துறை தலைவருமான ஜோதி நிர்மலாசாமி முன்னிலை வகித்தார். இதே போல் பெரம்பலூரில், மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்தம் தொடர்பாக அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் வருவாய் அதிகாரி ராஜேந்திரன், வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஜோதி நிர்மலாசாமி ஆகியோர் தலைமையில் நடந்தது. 


அப்போது சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்தம் சிறப்பு முகாம்களில், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் படிவங்கள் வழங்குவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும் ஜோதி நிர்மலாசாமி கூறுகையில் வருகிற 11,12-ந்தேதிகளில் அனைத்து கிராமங்களில் நடைபெறவுள்ள வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்த சிறப்பு முகாம்களில் 1.1.2020 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் தங்களது வண்ண புகைப்படம் ஒன்று, வயதிற்கான ஆதாரம் நகல், இருப்பிடத்திற்கான ஆதாரம் நகல் ஆகியவைகளை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து முகாம்கள் நடைபெறும் இடங்களில் வழங்கலாம். எனவே, வாக்காளர்கள் மேற்குறிப்பிட்ட தங்களுக்கு உரிய படிவங்களை பெற்று வாக்காளர் பட்டியலில் தங்களது விவரங்களை சரி செய்து கொள்ளலாம் என்றார்.

மேலும் செய்திகள்