பொலவபாளையத்தில் ஊராட்சி அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் : அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் திறந்து வைத்தார்
பொலவபாளையத்தில் ஊராட்சி அலுவலகத்துக்கு புதிய கட்டிடத்தை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் திறந்து வைத்தார்
நம்பியூர்,
நம்பியூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பொலவபாளையம் ஊராட்சி அலுவலகத்துக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.14லட்சம் செலவில் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நடைபெற்றது.
விழாவுக்கு நம்பியூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பாவேசு தலைமை தாங்கினார். நம்பியூர் தாசில்தார் வெங்கடேசன், நம்பியூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் தம்பி சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு, ரிப்பன் வெட்டி புதிய அலுவலகத்தை திறந்துவைத்து பேசினார்.
இதில் கட்சி நிர்வாகிகள் நம்பியூர் பேரூராட்சி அ.தி.மு.க. செயலாளர் கருப்பணன், எலத்தூர் பேரூராட்சி அ.தி.மு.க. செயலாளர் சேரன் சரவணன், பொலவபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் மணிகண்ட மூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர் கவிதா, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கவுசல்யா, குருமந்தூர் ஊராட்சி மன்ற தலைவர் தேவி சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.