வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு - திரளான பக்தர்கள் தரிசனம்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதையொட்டி, திரளான பக்தர்கள் வருகைதந்து சாமி தரிசனம் செய்தனர்.;
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் பஸ் நிலையம் அருகில் உள்ள வைகுண்ட பெருமாள் கோவிலில், நேற்று வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதையொட்டி, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்தனர்.
அப்போது அவர்கள் கோவிலில் நீண்ட வரிசையில் நின்று சாமியை தரிசனம் செய்தனர். அங்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டதும், பக்தர்கள் கோவிந்தா! கோவிந்தா! என்று பக்தி கரகோஷம் எழுப்பி வைகுண்ட பெருமாளை மனமுறுகி வழிபட்டனர்.
இந்த விழாவில், காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா, காஞ்சீபுரம் சப்-கலெக்டர் சரவணன், காஞ்சீபுரம் நகராட்சி ஆணையர் மகேஸ்வரி, வைகுண்ட பெருமாள் கோவில் தக்கார் ந.தியாகராஜன், கோவில் செயல் அலுவலர்கள் ஆ.குமரன், மா.வெள்ளைச்சாமி, சோ.செந்தில்குமார், சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு தேவையான வசதிகளையும், ஏற்பாடுகளையும், கோவில் அதிகாரிகள், பணியாளர்கள், நகர்வாழ் பொதுமக்கள் சிறப்பாக செய்து இருந்தனர்.
அதேபோல், காஞ்சீபுரம் காந்திரோடு தேரடியில் உள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றான புகழ்பெற்ற அஷ்டபுஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில், நேற்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதனையடுத்து, அதிகாலை 3 மணியில் இருந்தே இக்கோவிலுக்கு, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.
அதன்பின்னர் திறக்கப்பட்ட சொர்க்கவாசல் வழியாக சென்று சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கு வந்திருந்த பக்தர்களுக்கு அறுசுவையுடன் கூடிய அன்னதானம் வழங்கப்பட்டது.
பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமுண்டீஸ்வரி உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர்கள் ரஜினிகாந்த், சுரேஷ்சண்முகம் ஆகியோர் செய்து இருந்தனர்.
உத்திரமேரூர் அருகே உள்ள திருமுங்கூடல் அப்பன் வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் அதிகாலை 2 மணி முதல் சொர்க்கவாசல் திறப்பினை காண வந்த பக்தர்கள் பெருமாளை தரிசித்து விட்டு சென்றனர்.
இக்கோவில் சொர்க்கவாசல் திறப்பினை காண காஞ்சீபுரம், செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர்.
விழாவை முன்னிட்டு செங்கல்பட்டு துணைபோலீஸ் சூப்பிரண்டு கந்தன் தலைமையில் சாலவாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம், சப்-இன்ஸ்பெக்டர் நித்தியாநந்தம் மற்றும் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.