புனேயில் மாயமான தொழில் அதிபர் சுட்டுக் கொலை - உடலை மீட்டு போலீசார் விசாரணை

புனேயில்,மாயமான தொழில் அதிபர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.

Update: 2020-01-05 23:30 GMT
புனே,

புனே கன்டோன்மென்ட் பகுதியை சேர்ந்தவர் சந்தன் செவானி (வயது48). தொழில் அதிபர். இவர் திடீரென மாயமாகி விட்டார். குடும்பத்தினரால் அவரை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. இதனால் கலக்கம் அடைந்த அவரது குடும்பத்தினர் பந்த்கார்டன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில், சத்தாரா மாவட்டத்தில் லோனான்ட் டவுண் அருகே உள்ள ஒரு கிராமத்தில் ஒருவர் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.

போலீஸ் விசாரணையில், பிணமாக மீட்கப்பட்டது காணாமல் போன புனேயை சேர்ந்த தொழில் அதிபர் சந்தன் செவானி என்பது தெரியவந்தது.

அவரது உடலில் நெஞ்சிலும், தலையின் பின்பகுதியிலும் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருந்தது. இதன் மூலம் அவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். அவரை மர்மஆசாமிகள் வேறு எங்கேயோ வைத்து கொன்று விட்டு உடலை அங்கு வீசி சென்றிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்