குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு: உளுந்தூர்பேட்டையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உளுந்தூர்பேட்டையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2020-01-04 22:15 GMT
உளுந்தூர்பேட்டை,

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மையினர் பிரிவு சார்பில் உளுந்தூர்பேட்டை தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு வட்டார தலைவர் ஷேக் ஜாவத் தலைமை தாங்கினார். காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெய்கணே‌‌ஷ், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் வசந்த வேலு, வைத்தியநாதன், ராஜவேல், நகர செயலாளர் டேனியல் ராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட துணை செயலாளர் அறிவுக்கரசு, மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் வெங்கடேசன், ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் துரை.ரவிக்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்த சட்டத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டியும் கோ‌‌ஷம் எழுப்பப்பட்டன. இதில் காங்கிரஸ் கட்சி முன்னாள் மாவட்ட தலைவர்கள் தனபால், இளையராஜா, மாநில சிறுபான்மையினர் பிரிவு துணைத்தலைவர் வாசிம் ராஜா உள்பட பலர் பலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்