புத்தாண்டு கொண்டாட்டத்தில் விபத்து; அண்ணன்-தம்பி உள்பட 6 பேர் சாவு
குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட விபத்தில் அண்ணன்-தம்பி உள்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நாகர்கோவில்,
நாகர்கோவில் புத்தேரி கீழகலுங்கடியை சேர்ந்தவர் அஜெய் (வயது 18). இவருடைய தம்பி சுனில் (17). இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் நள்ளிரவில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக புறப்பட்டனர். அப்போது இவர்களுடைய நண்பர்களான கண்ணன் (17) மற்றும் ராஜ்குமார் (18) ஆகியோரும் சென்றனர். ஆனால் 4 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். நள்ளிரவில் ஆலயங்களுக்கு சென்று வழிபாடு செய்துவிட்டு மீண்டும் வீட்டுக்கு புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை அஜெய் ஓட்டினார். வடசேரியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் வந்துகொண்டிருந்த போது திடீரென மோட்டார் சைக்கிள் தாறுமாறாக ஓடியது.
அந்த சமயத்தில் எதிரே ஒரு லாரி வந்தது. மோட்டார் சைக்கிள் தாறுமாறாக வந்ததை பார்த்ததும் டிரைவர் லாரியை நிறுத்திவிட்டார். எனினும் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிள் உருக்குலைந்தது. இந்த விபத்தில் 4 பேரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். இவர்களில் அஜெய் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்து போனார். சுனில் உள்ளிட்ட 3 பேரும் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.
அண்ணன்-தம்பி
இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே சுனிலும் பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த கண்ணன் மற்றும் ராஜ்குமார் ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன. பின்னர் அஜெய் மற்றும் சுனில் ஆகியோரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக பிணவறைக்கு எடுத்து செல்லப்பட்டது.
விபத்தில் அண்ணன்-தம்பி இருவரும் பலியான சம்பவம் பெற்றோரை கதிகலங்க வைத்தது. மகன்களின் உடலை பார்த்து பெற்றோர் கதறிய காட்சி கண்ணீரை வரவழைத்தது. இச்சம்பவம் தொடர்பாக கோட்டார் போக்குவரத்து ஒழுங்குபிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
டிப்பர் லாரி
இதே போல களியல் அருகே படபச்சை பகுதியில் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் பரிதாபமாக இறந்தனர். அதாவது அருமனை அருகே அம்மாங்காலையை சேர்ந்தவர் சுரேஷ் (45). இவரும், இவருடைய நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த விஜயன் (44) மற்றும் திருவரம்பு பகுதியை சேர்ந்த பால்ராஜ் (42) ஆகிய 3 பேரும் சேர்ந்து புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தனர். படபச்சை பகுதியில் சென்றபோது எதிரே பாறாங்கற்களை ஏற்றிக் ெகாண்டு ஒரு டிப்பர் லாரி வந்தது. இந்த நிலையில் நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக லாரி மீது மோதியது. இதில் 3 பேரும் மோட்டார் சைக்கிளோடு சாலையில் விழுந்தனர். மேலும் லாரி சக்கரத்தில் மோட்டார் சைக்கிள் சிக்கி சிறிது தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டது.
3 பேர் சாவு
இந்த கோர விபத்தில் 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அருமனை போலீசார் அங்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர்.
இதற்கிைடயே விபத்து காரணமாக அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் துரிதமாக செயல்பட்டு போக்குவரத்து நெரிசலை சரிசெய்தனர். லாரிைய ஓட்டி வந்த டிரைவர் பாலமுருகன் அருமனை போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தடுப்பு சுவரில் மோதல்
மேலும் தேங்காப்பட்டணம் அம்சி என்ற இடத்தில் 3 ேபர் சென்ற ஒரு மோட்டார் சைக்கிள் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள தடுப்பு சுவரில் மோதியது. இதில் 3 பேரும் சாலையில் விழுந்தனர். இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியானார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த 2 பேரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பலியான ஒருவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் விபத்தில் பலியானவர் புதுக்கடை அருகே அனந்தமங்கலத்தை சேர்ந்த சுபின் (26) என்பது தெரியவந்தது. படுகாயம் அடைந்தவர்கள் அதே பகுதியை ேசர்ந்த சைஜூ (31), சக்திநகரை சேர்ந்த அஜித் (23) என்பது தெரியவந்தது. சுபின் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார்.
சோகம்
இவருடைய அண்ணன் திருமணம் வருகிற 8-ந் தேதி நடைபெறுகிறது. இதற்காக சுபின் கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் சொந்த ஊர் வந்தார். இந்த நிலையில் தேங்காப்பட்டணம் கடற்கரையில் புத்தாண்டு கொண்டாடிவிட்டு நண்பர்களுடன் சென்றபோது விபத்தில் சிக்கி பரிதாபமாக இறந்துவிட்டார்.
குமரி மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் 6 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.