காரைக்கால் கடற்கரை சாலையில் மோட்டார் சைக்கிள் திருடிய 3 பேர் கைது

காரைக்கால் கடற்கரையில் மோட்டார் சைக்கிளை திருடிய ஒரு சிறுவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் திருடிய மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டது.

Update: 2019-12-31 23:00 GMT
காரைக்கால்,

கும்பகோணத்தை சேர்ந்தவர் கனகராஜ். இவர் கடந்த 29-ந் தேதி, இவரும், இவருடைய நண்பர்கள் சிலரும் மோட்டார் சைக்கிள்களில் காரைக்கால் கடற்கரைக்கு வந்தனர். கடற்கரையில் சுற்றிவிட்டு, வீடு திரும்ப மோட்டார் சைக்கிளை எடுக்க வந்தபோது, கனகராஜ் தன்னுடைய மோட்டார் சைக்கிள் காணாமல் போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அதுகுறித்து காரைக்கால் டவுன் போலீசில் கனகராஜ் புகார் கொடுத்தார். புகாரின்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிளை திருடிய மர்ம நபர்களை தேடி வந்தனர்.

வாகன சோதனை

இந்நிலையில், நேற்று காரைக்கால் கடற்கரை சாலையில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர். போலீசார் அவர்களை நிறுத்தி, மோட்டார் சைக்கிளுக்கான ஆவணங்களை கேட்டபோது, அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். மேலும் அவர்களிடம் மோட்டார் சைக்கிளுக்கான ஆவணங்கள் இல்லை. அதுகுறித்து போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில், கும்பகோணம் தாராசுரத்தைச் சேர்ந்த லோகேஷ் (வயது 20), காரைக்கால் மேட்டைச்சேர்ந்த கவிமணி (20) மற்றொருவர் 17 வயதுக்குட்பட்டவர்.

கைது

இவர்கள் 3 பேரும், 29-ந் தேதி காரைக்கால் கடற்கரையில் திருடிய மோட்டார் சைக்கிளில் வந்தது தெரிய வந்தது. விசாரணையைத் தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் கைது செய்த போலீசார், மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்