திருமங்கலம் அருகே, லாரி கவிழ்ந்து 7 பேர் காயம்
திருமங்கலம் அருகே லாரி கவிழ்ந்து 7 பேர் காயம் அடைந்தனர்.
திருமங்கலம்,
திருநெல்வேலியை சேர்ந்தவர் ஞானம் (வயது26) இவர் தனது லாரியில் சிமெண்டு கலவை எந்திரத்தை ஏற்றி கொண்டு திருவனந்தபுரத்தில் இருந்து திருச்சி நோக்கி வந்து கொண்டு இருந்தார். லாரியில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் இருந்தனர்.
திருமங்கலம் மறவன்குளம் பஸ் நிறுத்தம் அருகே வரும்போது லாரி திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.
இதில் அதில் இருந்த தொழிலாளர்கள் ராஜேஷ் (31), பாதம்பிரகாஷ் (30) உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் அனைவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். திருமங்கலம் போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.
இந்த விபத்தினால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது.