வேளாங்கண்ணி அருகே வண்டலூர் பகுதியில் புகையான் நோய் தாக்குதலில் சம்பா நெற்பயிர்கள் சேதம் விவசாயிகள் கவலை
வேளாங்கண்ணி அருகே வண்டலூர் பகுதியில் புகையான் நோய் தாக்குதலில் சம்பா நெற்பயிர்கள் சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
வேளாங்கண்ணி,
தமிழகத்தில் காவிரி டெல்டா பகுதியான தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட பகுதிகளுக்கு பாசனத்துக்காக ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடுவது வழக்கம். மேட்டூர் அணையில் தண்ணீர் பற்றாக்குறையின் காரணமாக காலதாமதமாக கடந்த ஆகஸ்டு மாதம் 13-ந் தேதி மேட்டூர் அணையிலிருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. திறந்துவிடப்பட்ட தண்ணீர் நாகை மாவட்டத்திற்கு காலதாமதமாகவே வந்து சேர்ந்தது. ஆனால் மேட்டூர் அணையின் நீர்வரத்தை நம்பி அந்த பகுதி விவசாயிகள் சம்பா சாகுபடி செய்ய நேரடி நெல் விதைப்பு செய்து வந்தனர்.
புகையான் நோய் தாக்குதல்
இதையடுத்து வேளாங்கண்ணியை அடுத்த வண்டலூர் கீழத்தெரு பகுதியில் 500 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சம்பா சாகுபடி செய்து வந்தனர். இந்தநிலையில் அந்த பகுதியை சேர்ந்த காத்தான்(வயது70) என்பவர் ஒரு ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்து இருந்தார். தற்போது சம்பா சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தது. ஆனால் சம்பா நெற்பயிர்களை புகையான் நோய் தாக்கியது. இதில் நெற்பயிர்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் சம்பா சாகுபடி செய்யப்பட்ட இளம் நெற்பயிர்களையும் புகையான் நோய் தாக்கியுள்ளது.
நிவாரணம்
எனவே வேளாண்மைத்துறை அதிகாரிகள் புகையான் நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்ட பயிர்களை ஆய்வு செய்து, நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். புகையான் நோய் தாக்குதலினால் சேதமடைந்த வைக்கோலை விவசாயிகள் தீயிட்டு அப்புறப்படுத்தினர்.