திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில் 60 வாக்குச்சாவடிகள் ‘வெப் கேமரா’ மூலம் கண்காணிப்பு

திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில் 60 வாக்குச்சாவடிகள் வாக்குப்பதிவு வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது.

Update: 2019-12-29 23:15 GMT
திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில் 22 ஒன்றிய குழு உறுப்பினர்கள் 3 மாவட்ட குழு உறுப்பினர்கள் மற்றும் 36 ஊராட்சி மன்ற தலைவர்கள் 324 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு இன்று (திங்கட்கிழமை) வாக்குப்பதிவு நடக்கிறது.

இந்த ஊராட்சி ஒன்றியத்தில் 68,640 ஆண் வாக்காளர்கள், 71,489 பெண் வாக்காளர்கள், மூன்றாவது பாலினம் 14 பேர் சேர்த்து மொத்தம் 1,40,143 வாக்காளர்கள் உள்ளனர்.

இவர்கள் வாக்களிப்பதற்காக 220 வாக்குச்சாவடிகளுக்கும் 4 வண்ணமாக 5 லட்சம் வாக்குச்சீட்டுகள் மற்றும் 663 ஓட்டுப் பெட்டிகள் 75 உபகரணங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள் யாவும் 17 லாரிகளில் போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது.

மித பதற்றமான வாக்குச்சாவடிகள் என்று கண்டறியப்பட்ட 82-ல் 60 வாக்குச்சாவடிகள் இணையதள வசதி கொண்டதாக அமைந்துள்ளது.

ஆகவே அங்கு வெப் கேமரா பொருத்தப்பட்டுகண்காணிக்கப்படுகிறது.ேமலும் 22 வாக்குச்சாவடிகளில் ஓட்டு பதிவு வீடியோவில் பதிவு செய்யப்படுகிறது. வாக்குப்பதிவு அலுவலர்களாக 1540 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

போட்டி

திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில் 22 உறுப்பினர் இடங்களுக்கு அ.தி.மு.க.வினர் 18 பேரும், அதன் கூட்டணி கட்சி களான பாரதீய ஜனதா சார்பில் 2 பேரும் தலா ஒரு இடங்களில் தே.மு.தி.க., த.மா.கா.வும் போட்டியிடுகிறது.

தி.மு.க.வில் 20 பேரும் அதன் கூட்டணியில் உள்ள ம.தி.மு.க. மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தலா ஒருவரும் களம் இறங்கி உள்ளனர். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அனைத்து வார்டுகளிலும் போட்டியிடுகிறது. 17 பேர் நாம் தமிழர் கட்சி சார்பாக நிறுத்தப்பட்டுள்ளனர். காங்கிரஸ் 2 இடத்திலும் பட்டாளி மக்கள் கட்சி 2 இடத்திலும் சுயேச்்சைகள் 22 பேரும் போட்டியிடுகிறார்கள். இதில் அ.தி.மு.க.வும், தி.மு.கவும் நேரடியாக 16 வார்டுகளில் மோதுகின்றனர்.

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் இருந்த போதிலும் இந்த ஊராட்சி ஒன்றியத்தை பொறுத்தவரை 5-வது வார்டு மற்றும் 6-வது வார்டில் தி.மு.க.வை எதிர்த்து வேட்பாளரை நிறுத்தி இருக்கிறது. இதே போல அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ம.க.0வும் 14-வது வார்டில் தனியாக களம் இறங்கி உள்ளது.

மேலும் செய்திகள்