மார்கழி மாத ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு நெல்லையில் இருந்து நவகைலாய கோவில்களுக்கு சிறப்பு பஸ்கள்
மார்கழி மாத ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு நெல்லையில் இருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நவகைலாய கோவில்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
நெல்லை,
மார்கழி மாத ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு நெல்லையில் இருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நவகைலாய கோவில்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
மார்கழி ஞாயிற்றுக்கிழமை
மார்கழி மாத ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள நவகைலாய கோவில்களுக்கு பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த சேவை அரசு போக்குவரத்து கழகம் மூலம் செய்யப்பட்டு இருந்தது.
மார்கழி மாத 2-வது ஞாயிற்றுக்கிழமையான நேற்று நெல்லை புதிய பஸ்நிலையத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் புறப்பட்டது. அந்த பஸ்கள் பாபநாசம், சேரன்மாதேவி, கோடகநல்லூர், குன்னத்தூர், முறப்பாடு, ஸ்ரீவைகுண்டம், தென்திருப்பேரை, ராஜபதி, சேர்ந்தபூமங்கலம் (புன்னக்காயல்) ஆகிய ஊர்களுக்கு சென்றது. இரவு அந்த பஸ் நெல்லை புதிய பஸ்நிலையத்துக்கு திரும்பி வந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பயணம் செய்து நவகைலாய கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வந்தனர்.
முன்பதிவு
அதேபோல் வருகிற 5, 12 ஆகிய தேதிகளிலும் நெல்லையில் இருந்து காலையில் நவகைலாய கோவில்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதற்கான முன்பதிவு காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை அனைத்து நாட்களிலும் அரசு போக்குவரத்து கழகத்தில் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஒருவருக்கு ரூ.500 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.