நெல்லை மாநகர பகுதியில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய வியாபாரிகளுக்கு அபராதம் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

நெல்லை மாநகர பகுதியில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய வியாபாரிகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.

Update: 2019-12-29 22:00 GMT
நெல்லை, 

நெல்லை மாநகர பகுதியில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய வியாபாரிகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.

தடை செய்யப்பட்ட பொருட்கள்

தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து நெல்லை மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் உத்தரவின் பேரில் மாநகர சுகாதார அலுவலர் டாக்டர் சதீ‌‌ஷ்குமார் மேற்பார்வையில் 4 மண்டலங்களுக்கு தனித்தனியாக குழு அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த குழுவினர் தனியார் நிறுவனங்கள், டீக்கடைகள், பெட்டிக்கடைகள், இறைச்சி கடைகள், மீன் கடைகள் உள்ளிட்ட கடைகளில் சோதனை செய்து வருகின்றனர்.

வியாபாரிகளுக்கு அபராதம்

இந்தநிலையில் நெல்லை மண்டல உதவி ஆணையாளர் பிரேம் ஆனந்த் தலைமையில், சுகாதார அலுவலர் அரசகுமார், சுகாதார ஆய்வாளர்கள் இளங்கோ, நடராஜன் மற்றும் அதிகாரிகள் நெல்லை சந்திப்பு பகுதியில் சோதனை செய்தனர்.

ரெயில்வே பீடர் ரோடு பகுதிகளில் உள்ள கடைகள், டீக்கடைகளில் அதிகாரிகள் சோதனை செய்தனர். அங்கு 10 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதேபோல் நெல்லை டவுன் பகுதிகளிலும் சோதனை செய்யப்பட்டது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

அதேபோல் பாளையங்கோட்டை பகுதியிலும் மாநகராட்சி அதிகாரிகள் சோதனை செய்தனர். மொத்தம் 5 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் செய்திகள்