தூத்துக்குடியில் மிதவை கூண்டுகளில் மீன்வளர்ப்பு குறித்து மீனவ பெண்களுக்கு பயிற்சி

தூத்துக்குடியில் மிதவை கூண்டுகளில் மீன் வளர்ப்பு குறித்து மீனவ பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

Update: 2019-12-29 22:00 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் மிதவை கூண்டுகளில் மீன் வளர்ப்பு குறித்து மீனவ பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

மீன்வளர்ப்பு பயிற்சி

இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் பட்டியலின சிறப்பு துணை திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மேல அலங்காரத்தட்டு கிராமத்தை சேர்ந்த 2 மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த மீனவ பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சிக்கு மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலைய தலைமை விஞ்ஞானி பி.பி.மனோஜ்குமார் தலைமை தாங்கினார்.

திட்ட ஒருங்கிணைப்பாளர் விஞ்ஞானி காளிதாஸ் விளக்கி பேசினார். இந்திய வேளாண் ஆராய்ச்சி நிலைய டெல்லி தலைமை அலுவலகத்தை சேர்ந்த உதவி இயக்குநர் பி.பிரவீன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பயிற்சியை தொடங்கி வைத்தார். மேல அலங்காரத்தட்டு கிராம தலைவர் கே.கிரு‌‌ஷ்ணன் பேசினார்.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில் ஆராய்ச்சி நிலைய முதன்மை விஞ்ஞானிகள் பி.எஸ்.ஆ‌ஷா, சி.பி.சுஜா, விஞ்ஞானிகள் எஸ்.ரஞ்சித், எம்.கவிதா மற்றும் ஆராய்ச்சி நிலைய அலுவலர்கள், மீனவர்கள் கலந்து கொண்டனர். விஞ்ஞானி டி.லிங்கபிரபு நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்