மது குடித்ததை மனைவி கண்டித்ததால் எலக்ட்ரீசியன் தற்கொலை தூக்கில் தொங்கினார்
செண்பகராமன்புதூரில் மது குடித்ததை மனைவி கண்டித்ததால் எலக்ட்ரீசியன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆரல்வாய்மொழி,
பூதப்பாண்டி அருகே சிறமடம் பகுதியை ேசர்ந்தவர் கோலப்பன் (வயது 39), எலக்ட்ரீசியன். இவர், செண்பகராமன்புதூரை சேர்ந்த ஜீவிதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
கோலப்பன் கடந்த சில ஆண்டுகளாக மனைவியின் ஊரான செண்பகராமன்புதூரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். கோலப்பனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், சரியாக ேவலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்ததால் ஜீவிதா கண்டித்து வந்தார். இதன் காரணமாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது
தற்கொலை
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கோலப்பன் மது குடித்து விட்டு வீட்டுக்கு சென்றார். அப்போது, கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
அதன்பிறகு இரவு அனைவரும் தூங்கச் சென்றனர். நேற்று அதிகாலை ஜீவிதா எழுந்து பார்த்தபோது, கோலப்பன் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியில் அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர்.
பின்னர் இதுபற்றி ஆரல்வாய்மொழி போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த சப்-இன்ஸ்பெக்டர் சங்கர்குமார் விரைந்து சென்று கோலப்பனின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். மேலும், இதுகுறித்து இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மதுகுடித்ததை மனைவி கண்டித்ததால் எலக்ட்ரீசியன் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.