சிக்கமகளூருவில் சட்டம்-ஒழுங்கு சீராக உள்ளது போலீஸ் சூப்பிரண்டு பேட்டி
சிக்கமகளூருவில் சட்டம்-ஒழுங்கு சீராக உள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு ஹரீஷ் பாண்டே கூறினார்.;
சிக்கமகளூரு,
சிக்கமகளூருவில் சட்டம்-ஒழுங்கு சீராக உள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு ஹரீஷ் பாண்டே கூறினார்.
சட்டம்-ஒழுங்கு
சிக்கமகளூரு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரீஷ் பாண்டே தனது அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வந்ததும், சிக்கமகளூருவில் 5 மோட்டார் சைக்கிள்களுக்கு மர்மநபர்கள் தீ வைத்து எரித்தனர். இதில் தொடர்புடைய மர்மநபர்களை தீவிரமாக தேடிவருகிறோம். மாவட்டத்தில் இரவு நேரத்தில் போலீசார் 5 குழுவாக பிரித்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இப்போது 15 குழுவாக பிரிந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். இந்த பாதுகாப்பு பணியில் பெண் போலீசாரும் ஈடுபடு கிறார்கள்.
சூழ்நிலையை பொறுத்து பெண் போலீசாருக்கு பணி ஒதுக்கப்படுகிறது. நானும் கூட இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறேன். சிக்கமகளூருவில் சட்டம்-ஒழுங்கு சீராக உள்ளது.
போக்குவரத்து விதிமீறல்
மாவட்டத்தில் போக்குவரத்து விதிமீறல்கள் இல்லை. அனைவரும் போக்குவரத்து சட்டத்தை மதிக்கிறார்கள். இரவு நேரத்தில் போக்கு வரத்து விதிகளை யாராவது மீறுகிறார்களா? என்பதை கண்டறிய 60 இடங்கள் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி உள்ளோம். மாவட்டம் முழுவதும் இரவு நேரத்தில் தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுகிறார்கள். மேலும் திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர்களை கைது செய்ய தனிப்படையும் அமைத்து உள்ளோம். அவர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.