களக்காடு வடக்கு பச்சையாறு அணை நிரம்பியது விவசாயிகள் மகிழ்ச்சி

களக்காடு வடக்கு பச்சையாறு அணை நிரம்பியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2019-12-28 22:30 GMT
களக்காடு, 

களக்காடு வடக்கு பச்சையாறு அணை நிரம்பியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அணை நிரம்பியது

நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் கடந்த 2 மாதங்களாக வடகிழக்கு பருவமழை பெய்தது. இந்த மழையால் களக்காட்டில் உள்ள தாமரைகுளம், கீழப்பத்தை பெரியகுளம், பத்மநேரி குளம், வடகரை குளம் உள்பட 100-க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பியது. இதனால் விவசாயிகள் விவசாய பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

அதனை தொடர்ந்து களக்காட்டில் ஓடும் நாங்குநேரியான் கால்வாய், உப்பாறு, பச்சையாறுகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதுபோல களக்காடு வடக்கு பச்சையாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான கீரைக்காரன் தொண்டு பகுதியிலும் மழை கொட்டியது. இதனால் அணையின் நீர்மட்டம் உயர்ந்தது. மேலும் தலையணையில் இருந்து ஊட்டு கால்வாய் மூலம் அணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதால் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்தது. 50 அடி உயரம் கொண்ட அணை நேற்று நிரம்பி வழிந்தது.

விவசாயிகள் மகிழ்ச்சி

இதனால் அணையில் இருந்து உபரிநீர் வழிந்தோடுகிறது. இந்த அணையின் மூலம் 110 குளங்களும், 10 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களும் பயன் அடைகின்றன. அணையில் இருந்து உபரிநீர் வழிந்தோடும் பகுதியில் இளைஞர்கள் ஆபத்தான முறையில் குளித்து வருகின்றனர். அணை நிரம்பி வழிவதால் விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்