ஆலங்குளம் அருகே ரவுடி கொலையில் 5 பேர் கைது பரபரப்பு தகவல்

ஆலங்குளம் அருகே நடந்த ரவுடி கொலையில் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-12-28 22:00 GMT
ஆலங்குளம், 

ஆலங்குளம் அருகே நடந்த ரவுடி கொலையில் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

ரவுடி கொலை

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள ராம்நகரை சேர்ந்தவர் சுப்பையா மகன் குமார் என்ற கெவுளி குமார் (வயது 35). பிரபல ரவுடியான இவர் நேற்று முன்தினம் மாலையில் மர்மநபர்களால் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து பாப்பாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் இந்த வழக்கு தொடர்பாக ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் சாலை கோவில் தெருவை சேர்ந்த அப்ரானந்தம் மகன் மாரியப்பன் (19), அப்ரானந்த சாமி கோவில் தெருவை சேர்ந்த சண்முகம் மகன் விஜய் என்ற முத்துப்பாண்டி (23), அதே பகுதியை சேர்ந்த மாடக்கண்ணு மகன் ராஜா (25), முப்பிடாதி மகன் துரைக்குட்டி (23), அம்மன் கோவில் தெருவை சேர்ந்த வெள்ளத்துரை மகன் முருகன் (32) ஆகிய 5 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

பரபரப்பு தகவல்

அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியானது.

நெட்டூரில் இருதரப்புக்கு இடையே கோ‌‌ஷ்டி மோதல் இருந்து வந்துள்ளது. இந்தநிலையில் கடந்த 2014-ம் ஆண்டு நெட்டூரை சேர்ந்த முத்தையா மகன் மாரியப்பன் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் குமாருக்கு தொடர்பு இருந்துள்ளது. எனவே அவரை பழிக்குப்பழியாக கொலை செய்ய மாரியப்பனின் உறவினர்கள் திட்டம் தீட்டி வந்துள்ளனர். அதன்படி நேற்று முன்தினம் மாரியப்பனின் உறவினர்கள் குமாரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது.

மேலும் செய்திகள்