சேலம் மாவட்டத்தில் 2-ம் கட்ட தேர்தல்: வாக்குச்சாவடிக்கு பொருட்களை பிரித்து அனுப்பும் பணி கலெக்டர் ஆய்வு
சேலம் மாவட்டத்தில் 2-ம் கட்டமாக நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்குச்சாவடிக்கு தேவையான பொருட்களை பிரித்து அனுப்பும் பணிகளை கலெக்டர் ராமன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சேலம்,
சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணம், வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், ஆத்தூர், தலைவாசல் மற்றும் கெங்கவல்லி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான 2-ம் கட்ட தேர்தல் நாளை(திங்கட்கிழமை) நடக்கிறது. இந்த தேர்தலுக்கான வாக்குச்சாவடிக்கு ேதவையான பொருட்களை பிரித்து அனுப்பும் பணிகளையும், வாக்கு எண்ணும் மையங்களில் நடைபெற்றுவரும் முன்னேற்பாடு பணிகளையும் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ராமன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கி பேசியதாவது:- மாவட்டத்தில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது. எனவே, தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்ளிட்ட அனைத்து அலுவலர்களும் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்.
முன்னேற்பாடு பணி
அதேபோல் வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குப்பெட்டி வைப்பதற்கு தேவையான பாதுகாப்பு அறைகளை முழுமையாக தயார்படுத்திக்கொள்ள வேண்டும். வாக்கு எண்ணிக்கையின் போது மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிகளுக்கான வாக்குகள் எண்ணும் அறையும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்பதவிகளுக்கான வாக்குகள் எண்ணும் அறையும், கிராம ஊராட்சிமன்ற தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான வாக்குகள் எண்ணும் அறையினையும் தனித்தனியாக அமைத்திட வேண்டும்.
மேலும், பதற்றமான வாக்குச்சாவடிகள் நுண் பார்வையாளர்கள் மூலமும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டும் கண்காணிக்கப்படும். 2-ம் கட்ட தேர்தலுக்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் முழுமையாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் வாக்களித்து 100 சதவீதம் ஜனநாயக கடமையை நிறைவேற்றிட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆய்வு
இதைத் தொடர்ந்து கலெக்டர் ராமன் அயோத்தியாப்பட்டணம், வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், ஆத்தூர், தலைவாசல் மற்றும் கெங்கவல்லி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களுக்கு சென்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அருள்ஜோதி அரசன், ஆத்தூர் உதவி கலெக்டர் துரை மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உடனிருந்தனர்.