பார்வையற்றவர்களுக்கு தகுதி அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும் முப்பெரும் விழாவில் வலியுறுத்தல்
பார்வையற்றவர்களுக்கு தகுதி அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும் என்று நாகர்கோவிலில் நடந்த முப்பெரும் விழாவில் வலியுறுத்தப்பட்டது.
நாகர்கோவில்,
தமிழ்நாடு பார்வையற்றோர் இயலாதோர் நல அறக்கட்டளையின் சார்பில் 15-ம் ஆண்டு தொடக்க விழா, மாற்றுத்திறன் படைத்தோர் தினவிழா, ஐக்கிய கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினவிழா ஆகிய முப்பெரும் விழா நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.
விழாவுக்கு தமிழ்நாடு பார்வையற்றோர் இயலாதோர் நல அறக்கட்டளை இயக்குனர் அருள்செல்வம் தலைமை தாங்கினார். கவுரவத் தலைவர் ஜெரேமியாஸ் முன்னிலை வகித்தார். மூர்த்தி வரவேற்று பேசினார். ஆசாரிபள்ளம் சி.எஸ்.ஐ. திருச்சபை நல்ல மேய்ப்பன் ஆலய போதகர் ஐசக் சுந்தர்சிங் தொடக்க ஜெபம் செய்தார். பிரியா இறைவணக்கம் பாடினார். என்.ஜி.ஓ. காலனி சி.எஸ்.ஐ. ஆலய போதகர் ஆல்வின் ஜெயக்குமார், வெட்டூர்ணிமடம் சல்வேசன் ஆர்மி பூத் டக்கர் நினைவு ஆலய மேஜர் ஜஸ்டின், கோட்டார் புனித சவேரியார் பேராலய பங்குத்தந்தை குணபால் ஆராச்சி உள்பட பலர் வாழ்த்தி பேசினார்கள்.
நலத்திட்ட உதவிகள்
திசையன்விளை தொழிலதிபர் லைசாள் எட்வர்ட், பாலப்பள்ளம் படுவூர் ராஜன், டிம்பர் செல்வராஜ், சுங்கான்கடை செயின்ட் சேவியர் கத்தோலிக்க என்ஜினீயரிங் கல்லூரி தாளாளர் மரிய வில்லியம், பொருளாளர் பிரான்சிஸ் சேவியர், நாகர்ேகாவில் அல்போன்சா பள்ளி தாளாளர் சனில் ஜாண்பந்தி சிறக்கால், நாகர்கோவில் இரட்சணிய சேனை கேத்தரீன்பூத் மருத்துவமனை நிர்வாக அலுவலர் ஜெயசீலன் ஆகியோர் நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றினர். முடிவில் இசக்கிமுத்து நன்றி கூறினார்.
விழாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
50 சதவீத மானியத்துடன் கடன்
விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு பார்வையிழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு அரசால் வழங்கப்படும் மாத உதவித்தொகை ஆயிரம் ரூபாயை, 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். தமிழகத்தில் படித்த பார்வையற்றோருக்கு அவரவர்களின் தகுதியின் அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். மாற்றுத்திறன் படைத்த பார்வையற்றோர் சுயமாக வேலை செய்யும் பொருட்டு அரசு வங்கிகளில் 50 சதவீதம் மானியத்துடன் கூடிய கடனுதவி எந்தவித நிபந்தனையுமின்றி வழங்க வேண்டும்.
பார்வையிழந்த மாற்றுத்திறன் படைத்தோருக்கு அரசு சமத்துவபுரம் போன்ற குடியிருப்புகளில் வீடு ஒதுக்க வேண்டும். பார்வையிழந்த நபர்களின் குடும்பத்துக்காக அவர்களது பெயரில் பதிவு செய்துள்ள கியாஸ் சிலிண்டரை குறைந்த கட்டணத்தில் வழங்க வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.