திருக்காட்டுப்பள்ளி, திருவையாறில் வாக்குப்பெட்டிகளுக்கு பலத்த பாதுகாப்பு

திருக்காட்டுப்பள்ளி, திருவையாறில் வாக்குப்பெட்டிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Update: 2019-12-28 23:00 GMT
திருக்காட்டுப்பள்ளி,

தஞ்சை மாவட்டம் பூதலூர் ஒன்றியத்தில் ஒரு மாவட்ட ஊராட்சி உறுப்பினர், 16 ஒன்றியக்குழு உறுப்பினர்கள், 42 ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி வார்டு உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான உள்ளாட்சி தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. பூதலூர் ஒன்றியத்தில் மொத்தம் 168 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடந்தது.

வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் வாக்குப்பெட்டிகளை திருக்காட்டுப்பள்ளி சர் சிவசாமி அய்யர் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு எடுத்து செல்லும் பணி நேற்று முன்தினம் இரவு தொடங்கியது. இந்த பணி நேற்று அதிகாலை 4.30 மணி வரை நடந்தது.

பலத்த பாதுகாப்பு

வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு கொண்டு வரப்பட்ட வாக்குப் பெட்டிகளை தேர்தல் அதிகாரிகள் கோபாலகிரு‌‌ஷ்ணன், கணேசன் ஆகியோர் சரிபார்த்தனர்.

அனைத்து பெட்டிகளும் வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வந்து சேர்ந்த பின்னர் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்ட அறை பூட்டி சீல் வைக்கப்பட்டது. மேலும் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

திருவையாறு

திருவையாறு ஒன்றியத்தில் உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு 167 வாக்குச்சாவடிகளில் நேற்று முன்தினம் நடந்தது. வாக்குப்பதிவு முடிவடைந்ததும் வாக்குச்சாவடிகளில் இருந்து வாக்குப்பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் திருவையாறு சீனிவாசராவ் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு கொண்டு வரப்பட்டன.

வருகிற 2-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ள நிலையில் திருவையாறில் வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கு வாக்குப்பெட்டிகள் உள்ள அறைக்கு சீல் வைக்கப்பட்டு, ஆயுதம் ஏந்திய போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வாக்குப்பெட்டி வைக்கப்பட்டுள்ள பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு அதன் மூலமாக போலீசார் கண் காணித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்