வலங்கைமான் ஒன்றியத்தில் நாளை உள்ளாட்சி தேர்தல்: வாக்கு எண்ணும் மையத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
வலங்கைமான் ஒன்றியத்தில் நாளை (திங்கட்கிழமை) உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இந்த நிலையில் வாக்கு எண்ணும் மையத்தை போலீஸ் சூப்பிரண்டு துரை ஆய்வு செய்தார்.
வலங்கைமான்,
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியத்தில் நாளை (திங்கட்கிழமை) உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இதில் 50 ஊராட்சி மன்ற தலைவர்கள், 2 மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், 15 ஒன்றியக்குழு வார்டு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மொத்தம் 67 ஆயிரத்து 269 வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக ஒன்றிய பகுதிகளில் 180 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
வாக்கு எண்ணிக்கை வருகிற 2-ந் தேதி நடக்கிறது. இதற்காக வலங்கைமானில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு வாக்கு பெட்டிகள் பாதுகாப்பு அறை, வாக்கு எண்ணுவதற்கான அறைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் இரும்பு தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் வலங்கைமானில் வாக்கு எண்ணும் மையத்தை திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
பாதுகாப்பு ஏற்பாடுகள்
எவ்வித அசம்பாவிதங்களும் நடக்காமல் வாக்காளர்கள் சுதந்திரமாக வாக்களிக்க தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் பணியையொட்டி மன்னார்குடி, பாபநாசம் மார்க்கத்தில் இருந்து வாகனங்களில் வரும் வேட்பாளர்கள், முகவர்கள் வலங்கைமான் கடைத்தெரு, மாரியம்மன் கோவில் வழியாக சென்று வடக்கு அக்ரஹாரம், நடு அக்ரஹாரம், தெற்கு அக்ரஹாரம், தாசில்தார் அலுவலக சாலை உள்ளிட்ட இடங்களில் தங்களுடைய வாகனங்களை நிறுத்த வேண்டும்.
இதேபோல் குடவாசல் மார்க்கத்தில் இருந்து வருபவர்கள் உண்ணாமுலை அம்மன் கோவில் பகுதியில் வாகனங்களை நிறுத்தலாம்.
சோதனை
வேட்பாளர்கள் மற்றும் முகவர்களை உரிய சோதனை செய்த பின்னரே வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் அனுமதிக்க வேண்டும் என போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தும் அலுவலர்களால் வழங்கப்பட்ட அடையாள அட்டை இருந்தால் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது ஒன்றிய ஆணையர்கள் சிவகுமார், தமிழ்ச்செல்வி, நன்னிலம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுகுமார், வலங்கைமான் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகோபால், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜா, செந்தில்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.