கூடுவாஞ்சேரியில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

கூடுவாஞ்சேரியில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2019-12-28 22:00 GMT
வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருள் நகர் குபேரன் தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 25), இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்படும் என்று கூறப்படுகிறது. வயிற்றுவலி அதிகமான காரணத்தால் மனமுடைந்த கார்த்திக் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த கூடுவாஞ்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கார்த்திக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்