சரியாக தேர்வு எழுதாததால் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை - உருக்கமான கடிதம் சிக்கியது
கல்லூரி பருவத்தேர்வை சரியாக எழுதாததால் மனமுடைந்த மாணவி, தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் எழுதிய உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கியது.
திருவொற்றியூர்,
திருவொற்றியூர் ரெயில் நிலையம் சாலையைச் சேர்ந்தவர் சாமுவேல். இவர், சென்னை மாநகராட்சி 5-வது மண்டலத்தில் சென்னை குடிநீர் வாரியத்தில் கிளார்க்காக வேலை பார்த்து வருகிறார்.
இவருடைய மகள் கீர்த்தனா(வயது 18). இவர், மணலி சேலைவாயலில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் கல்லூரியில் பருவத்தேர்வு நடைபெற்றது.
அங்கு, தங்கள் மகள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மகளின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். சத்தம்கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி திருவொற்றியூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்துசென்ற போலீசார், தூக்கில் தொங்கிய மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவரது அறையில் போலீசார் சோதனை நடத்தினர்.
அதில் மாணவி கீர்த்தனா, தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக எழுதிய உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கியது.
அதில், “எனது பெற்றோர் மிகவும் சிரமப்பட்டு என்னை படிக்க வைக்கின்றனர். ஆனால் நான் கல்லூரியில் நடைபெற்ற பருவத்தேர்வை சரியாக எழுதவில்லை. இதனால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன். என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை” என அதில் எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

தேர்வு எழுதிவிட்டு கல்லூரியில் இருந்து வீட்டுக்கு வந்த மாணவி, தனது அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார். நீண்டநேரம் ஆகியும் அவர் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த பெற்றோர், அறைக்குள் சென்று பார்த்தனர்.