தூய்மை மட்டும் போதாது, வளர்ச்சி தேவை: மும்பை நகரின் தன்மையை மாற்றி அமைக்க வேண்டும் உத்தவ் தாக்கரே பேச்சு
மும்பை நகரின் தன்மையை மாற்றி அமைக்க வேண்டும் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பேசினார்.;
மும்பை,
மும்பை நகரின் தன்மையை மாற்றி அமைக்க வேண்டும் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பேசினார்.
ஆலோசனை
முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நேற்று மும்பை மாநகராட்சி எதிர்கொண்டு வரும் பிரச்சினைகள் குறித்து சயாத்திரி மாளிகையில் மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் அதிகாரிகள் மத்தியில் பேசியதாவது:-
மும்பை உலக வரைபடத்தில் ஒரு முக்கிய பெருநகரமாகும். இதை வெறும் அழகுப் படுத்துவது மட்டுமே போதுமானது அல்ல. சாலைகள், நடைபாதைகள், போக்குவரத்து, பூங்காக்கள், சந்தைகள், கல்வி மையங்கள், சுகாதாரம் ஆகியவற்றை ஒருங்கிணைந்த அணுகுமுறையின் மூலம் நாம் மேம்படுத்தவேண்டும்.
தன்மையை மாற்ற வேண்டும்
மேலும் மும்பையில் வைக்கப்பட்டுள்ள சட்டவிரோத பதாகைகள் கண்டிப்பாக அகற்றப்படவேண்டும். சிறப்பாக பணிபுரியும் மாநகராட்சி துணை கமிஷனர்களுக்கு வெகுமதி அளிக்கவேண்டும்.
வெறும் தூய்மையில் மட்டும் கவனம் செலுத் தாமல், நகரத்தின் தன்மையை மாற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும். நகரத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி யும் மையமாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக மும்பை நகரை அழகுப்படுத்துவது குறித்த வரைபடத்தை உத்தவ்தாக்கரேயிடம் அதிகாரிகள் காட்டி விளக்கம் அளித்தனர்.