நெல்லை மாநகராட்சியில் கட்டுமான வரைபட அனுமதி பெற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் ஆணையாளர் கண்ணன் தகவல்

நெல்லை மாநகராட்சியில் கட்டுமான வரைபட அனுமதி பெற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று ஆணையாளர் கண்ணன் தெரிவித்து உள்ளார்.

Update: 2019-12-27 21:30 GMT
நெல்லை, 

நெல்லை மாநகராட்சியில் கட்டுமான வரைபட அனுமதி பெற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று ஆணையாளர் கண்ணன் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கட்டுமான வரைபட அனுமதி

நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களின் சிரமத்தை எளிமையாக்கும் வகையில் கட்டிட அனுமதி மற்றும் திட்ட அனுமதி வழங்கிட உள்ளாட்சி எடுத்துக்கொள்ளும் கால அளவினை குறைக்கும் வகையில், மத்திய அரசின் மாதிரி கட்டிட விதிகள் 2016-ன் வழிகாட்டுதலுக்கு ஏற்ப குடியிருப்பு கட்டிடங்கள் கட்டுவதற்காக அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவுகள், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மனைப்பிரிவுகள், உள்ளாட்சிகளால் அங்கீகரிக்கப்பட்ட தனி மனைகள் போன்றவற்றில் 2 ஆயிரத்து 500 சதுர அடி பரப்பளவிற்கு மேற்படாத நிலத்தில் 1,200 சதுர அடி பரப்பளவிற்குள் கட்டப்படும் குடியிருப்பு கட்டிடங்களுக்கு மட்டும் கள ஆய்வு இன்றி எளிய முறையில் ஆவணங்களின் அடிப்படையில் இணையதளம் வாயிலாக, கட்டிடம் மற்றும் திட்ட அனுமதியினை பெறலாம்.

இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

எனவே பொதுமக்கள் பல்வேறு பணிகளுக்கு இடையே நேரடியாக வந்து விண்ணப்பிப்பதை தவிர்த்து www.tnurbanepay.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து எளிமையான முறையில் கட்டுமான வரைபட அனுமதி பெற்றுக்கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்