மணப்பாட்டில் திருமண கோலத்தில் வாக்களித்த மணமக்கள்
மணப்பாட்டில் திருமண கோலத்தில் மணமக்கள் வாக்களித்தனர்.
உடன்குடி,
மணப்பாட்டில் திருமண கோலத்தில் மணமக்கள் வாக்களித்தனர்.
திருமண கோலத்தில்...
தூத்துக்குடி மாவட்டத்தில் முதல் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நேற்று நடைபெற்றது. இத்தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக இருந்தது. வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
இந்த நிலையில் உடன்குடி அருகே மணப்பாடு லைன் தெருவைச் சேர்ந்தவர் ஜோன்சன். இவருடைய மகன் எம்பார். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.
இவருக்கும், மணப்பாடு குண்டல் தெருவைச் சேர்ந்த வளன் மகள் விவினாவுக்கும் மணப்பாடு புனித தூய ஆவி ஆலயத்தில் நேற்று காலையில் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த சிறிதுநேரத்தில் மணமக்கள் இருவரும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க திட்டமிட்டனர்.
வாழ்த்து
அதன்படி, அவர்கள் 2 பேரும் திருமண கோலத்தில், மணப்பாடு புனித வளனார் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடிக்கு சென்றனர். அங்கு அவர்கள், தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.
திருமணம் முடிந்த சிறிதுநேரத்தில் திருமண கோலத்திலேயே சென்று வாக்களித்த மணமக்களை அனைவரும் வாழ்த்தினர்.