மதுரை அருகே, பாலத்தின் தடுப்புச்சுவரில் கார் மோதல்; அரசு பள்ளி ஆசிரியை பலி
மதுரை அருகே பாலத்தின் தடுப்புச்சுவரில் கார் மோதிய விபத்தில் அரசு பள்ளி ஆசிரியை உயிரிழந்தார். கணவர், மகள் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தார்கள்.
மதுரை,
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை யை சேர்ந்தவர் சரவணன் (வயது 52). இவரது மனை வி தேவ கி(49), அங்குள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவரது மகள் கீர்த்தனா(15).
சரவணன் தனது மனைவி, மகள் மற்றும் உறவினர் சிவகுமார்(50) ஆகியோருடன் காரில் மதுரைக்கு புறப்பட்டார். மதுரை பாண்டிகோவில் ரிங்ரோடு அருகே வந்த போது கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் கார் அதே வேகத்தில் அங்கிருந்த பாலத்தின் தடுப்புச்சுவரின் மீது மோதியது.
இதில் காரில் இருந்த தேவகி உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மற்ற 3 பேரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சரவணன், கீர்த்தனா, சிவகுமார் ஆகிய 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து தல்லாகுளம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.