சூரிய கிரகணத்தையொட்டி, கோவையில் கோவில்களின் நடை அடைப்பு
சூரிய கிரகணத்தையொட்டி கோவையில் கோவில்களின் நடை அடைக்கப்பட்டு இருந்தன.
கோவை,
சூரிய கிரகணத்தையொட்டி கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில், கோனியம்மன்கோவில், பேரூா் பட்டீசுவரர் கோவில், புலியகுளம் முந்தி விநாயகர் கோவில், தண்டுமாரியம்மன்கோவில் மற்றும் பல்வேறு கோவில்களில் காலை 7 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.
சூரிய கிரகணம் முடிந்ததும் கோவிலை நன்கு கழுவிவிட்டு பரிகார பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து மாலை 4 மணிக்கு மேல் நடை திறக்கப்பட்டன.
மாலையில் வழக்கமான பூஜைகள் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
சூரிய கிரகணம் முடிந்த பின்னர் பொதுமக்கள் தங்கள் வீடுகளை சுத்தம் செய்தனர். பின்னர் குளித்துவிட்டு, வீட்டில் பூஜை செய்து வழிபட்டனர். மாலையில் கோவில்களுக்கு சென்று பரிகார பூஜைகளை செய்தனர்.
கோவையில் பொதுமக்கள் தங்களது வழக்கமான வேலைகளில் எப்போதும்போல் ஈடுபட்டனர்.