குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு: அச்சன்புதூரில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அச்சன்புதூரில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அச்சன்புதூர்,
செங்கோட்டை அருகே உள்ள அச்சன்புதூரில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்தும், அந்த சட்டத்தை திரும்ப பெறக்கோரியும் நேற்று அரசியல் கட்சிகள், பல்வேறு இயக்கங்கள் மற்றும் உலமா சபை சார்பில் கடையடைப்பு போராட்டம் நடந்தது.
இதே கோரிக்கையை வலியுறுத்தி நேற்று காலையில் அச்சன்புதூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. நாகூர்கனி தலைமை தாங்கினார். வாசுதேவன், சம்சுதீன், முகம்மது நயினார், மைதீன், முகம்மது கனி, சுலைமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜாபர்அலி உஸ்மானி, நயினார் முகம்மது, மைதீன் சேட் கான், டேனியல் அருள்சிங், சாகுல் அமீது வாஹிதி, செரீப் முகம்மது, ராசப்பா, மீரான்கனி, முத்துச்சாமி, முகைதீன் அல்தாபி ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
வாசுதேவநல்லூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும். தமிழகத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தக்கூடாது. ஈழத்தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஒன்றிய செயலாளர் நடராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர் பி.நடராஜன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் ராமசுப்பு, மருதையா, சுப்பையா, பேச்சியம்மாள், சுப்பிரமணியன், கிளை செயலாளர்கள் மீனாட்சிராஜ், சஞ்சீவி, வெள்ளத்துரை, தங்கமாரி, கணபதிசாமி, கருப்பசாமி, பிச்சை, புஷ்பம், சிவசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.