கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை முறைகேடுகள் இன்றி நடத்த வேண்டும் கலெக்டரிடம் மனு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை முறைகேடுகள் இன்றி நடத்த வேண்டும் என கலெக்டரிடம், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மனு அளித்தனர்.
கிருஷ்ணகிரி,
தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் செங்குட்டுவன், பிரகாஷ், முருகன், சத்யா ஆகியோர் நேற்று கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் பிரபாகரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:- மாவட்டத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மற்றும் 30-ந் தேதி என இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 23-ந் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் இதுவரை கிடைக்கவில்லை.
பதற்றமான வாக்குச்சாவடிகளான கொடக்கரை, கச்சுவாடி, பேல்கரை, வேப்பனப்பள்ளி ஊராட்சி, சென்னப்பள்ளி ஊராட்சி, சிகரமானப்பள்ளி, நாச்சிக்குப்பம் ஊராட்சிகளில் கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும். மேலும், வாக்குப்பதிவுகள் வீடியோ பதிவு செய்ய வேண்டும்.
முறைகேடுகள் இன்றி
தேர்தலில் பண வினியோகத்தை தடுத்திட சோதனைகள் அதிகப்படுத்த வேண்டும். வாக்குச்சீட்டுகளை தனித்தனியாக பிரிக்கும் போது, கட்டாயம் அரசியல் கட்சிகளின் முகவர்களை அனுமதிக்க வேண்டும். வாக்கு எண்ணும் மையத்தில் பணியில் உள்ள தேர்தல் அலுவலர்கள் செல்போன் பயன்படுத்தவும், எடுத்து செல்லவும் தடை விதிக்க வேண்டும்.
வாக்குச்சீட்டுகள் எண்ணி முடிக்கப்பட்ட பின்பு, காலதாமதமின்றி உடனடியாக முடிவுகளை அறிவித்திட வேண்டும். உள்ளாட்சி தேர்தலை முறைகேடுகள் இன்றி நடத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு அளிக்கும் நிகழ்ச்சியின் போது ராணிப்பேட்டை எம்.எல்.ஏ.,வும், வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளருமான காந்தி, மேற்கு மாவட்ட அவைத் தலைவர் யுவராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.