டிக்-டாக்’ வீடியோவில் கத்தியை காட்டி மிரட்டல் விடுத்த 5 வாலிபர்கள் கைது

டிக்-டாக்’ வீடியோவில் கத்தியை காட்டி மிரட்டல் விடுத்த 5 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-12-25 22:30 GMT
தாம்பரம், 

சென்னையை அடுத்த தாம்பரம் பகுதியில், வாலிபர்கள் மத்தியில் செல்போனில் ‘டிக்-டாக்’ வீடியோ ஒன்று வைரலாக பரவியது. சுமார் 15 நொடிகள் ஓடக்கூடிய அந்த வீடியோவில், வாலிபர்கள் சிலர் கஞ்சா போதையில் கானா பாட்டு பாடியபடி, கையில் கத்தியை காட்டி மிரட்டுவதுபோன்ற காட்சிகள் இடம்பெற்று உள்ளது. ‘வாட்ஸ்அப்’பிலும் இந்த வீடியோ வேகமாக பரவியது.

இது தொடர்பாக தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த வீடியோவை பதிவிட்ட கும்பல் குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் சம்பவம் தொடர்பாக மேற்கு தாம்பரத்தைச் சேர்ந்த மணிகண்டன்(வயது 19), சுரேஷ்(23), நிஷாந்த்(19), கிருஷ்ணகுமார்(19) உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

தாம்பரத்தில் கத்தியுடன் சுற்றித்திரிந்தபோது இவர்கள் கைது செய்யப்பட்டனர். கைதான இவர்கள் மீது ஏற்கனவே தாம்பரம் போலீஸ் நிலையத்தில் சிறிய குற்ற வழக்குகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்