திருமணமான 2 ஆண்டுகளில் பெண் மர்ம சாவு போலீசார் விசாரணை

திருமணமான 2 ஆண்டுகளில் பெண் மர்மமான முறையில் இறந்தார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2019-12-25 22:15 GMT
கள்ளப்பெரம்பூர்,

தஞ்சை அருகே உள்ள குருங்குளம் தெற்கு அம்பலக்கார தெருவை சேர்ந்த ராஜாங்கம் மகன் செல்வநிதி (வயது34). தஞ்சையை அடுத்துள்ள கண்டிதம்பட்டு உச்சிமான்சோலையை சேர்ந்த கலியபெருமாள் மகள் சுகன்யா (26). செல்வநிதி, சுகன்யா ஆகியோர் 2 ஆண்டுகளுக்கு முன்பு குருங்குளத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணம் முடிந்ததும் சுகன்யா கணவர் செல்வநிதியுடன் குருங்குளத்தில் வசித்து வந்தார். இவர்களுக்கு 1 வயதில் ஆண் குழந்தை உள்ளது. செல்வநிதி கூலி வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று சுகன்யா மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கி உள்ளார். இதுபற்றி தகவல் அறிந்த வல்லம் போலீசார் குருங்குளம் சென்று சுகன்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணை

இதுகுறித்து கலியபெருமாள் வல்லம் போலீசில் புகார் அளித்தார். அதில் தனது மகள் சுகன்யாவின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி உள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

திருமணமான 2 ஆண்டுகளில் பெண் மர்மமான முறையில் இறந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்