மெலட்டூர் அருகே மதுபாட்டில்கள் கடத்திய வக்கீல் கைது கார் பறிமுதல்
மெலட்டூர் அருகே மதுபாட்டில்கள் கடத்திய வக்கீல் கைது செய்யப்பட்டார். கார் பறிமுதல் செய்யப்பட்டது.
மெலட்டூர்,
தஞ்சை மாவட்டம் மெலட்டூர் அருகே உள்ள இரும்புதலை மெயின் ரோட்டில் பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு நந்தகோபால், இன்ஸ்பெக்டர் கரிகால்சோழன், ஏட்டுகள் சக்திவேல், சதீஷ் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை வழிமறித்து போலீசார் சோதனை நடத்தினர்.
இதில் காரில் 3 அட்டை பெட்டிகளில் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் கடத்தி செல்லப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் காரையும், மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக காரில் வந்தவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் அரித்துவாரமங்கலம் முனியூர் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த வக்கீல் ராஜ்குமார்(வயது35) என்பது தெரியவந்தது.
மதுக்கடை விடுமுறை
மேலும் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு 3 நாட்கள் மதுக்கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டிருப்பதால் மதுபாட்டில்களை இரும்புதலை கிராமத்தில் உள்ள அரசு மதுக்கடையில் இருந்து மொத்தமாக வாங்கி காரில் கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜ்குமாரை கைது செய்தனர்.