கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தன. கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்து கொண்டனர்.

Update: 2019-12-25 22:00 GMT
திருவண்ணாமலை,

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி திருவண்ணாமலையில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன.

மேலும் தேவாலய வளாகத்தில் ஏசு கிறிஸ்துவின் பிறப்பை விளக்கும் வகையில் தத்ரூபமாக குடில்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

திருவண்ணாமலை-திண்டிவனம் சாலையில் உள்ள உலக மாதா தேவாலயத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி அளவில் ஏசு கிறிஸ்துவின் பிறப்பை விளக்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பங்கு தந்தை ஞானஜோதி தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.

திருவண்ணாமலை பெரியார் சிலை அருகே உள்ள ஆற்காடு லுத்தரன் திருச்சபை தேவாலயத்தில் நேற்று ஆயர் சாமுவேல் தலைமையில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்தனர். பின்னர் அவர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்து கொண்டனர்.

இதேபோல திருவண்ணாமலை சாரோனில் உள்ள தேவாலயத்திலும், தேனிமலையில் உள்ள ஏசு தேவாலயத்திலும் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

ஆரணி, பழைய ஆற்காடு சாலையில் உள்ள சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் விழாவையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்தனர். பின்னர் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்.

இதேபோல் சூரியகுளம் அருகே உள்ள சி.எஸ்.ஐ. பெந்தகோஸ்தே தேவாலயம், கார்த்திகேயன் சாலையில் உள்ள புனித காணிக்கை அன்னை தேவாலயத்திலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

மேலும் செய்திகள்