பெரம்பலூரில் சிறுமியுடன் காதல்: இறந்த பெண்சிசுவை புதைத்த பட்டதாரி வாலிபர் கைது
பெரம்பலூரில் சிறுமியுடன் பட்டதாரி வாலிபருக்கு ஏற்பட்ட காதலில் இறந்த நிலையில் பெண் சிசு பிறந்தது. அதனை புதைத்த அந்த வாலிபரை மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் அருகே உள்ள லாடபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பழனியாண்டி. இவரது மகன் சுரேஷ்குமார்(வயது 27). எம்.பி.ஏ. படித்து விட்டு வேலையில்லாமல் வீட்டில் இருந்தார். இவருக்கும், பெரம்பலூரில் பிளஸ்-2 படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்த 17 வயது சிறுமி ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் சுரேஷ்குமார் சிறுமியை திருமணம் செய்துகொள்வதாக கூறி, அந்த சிறுமியுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதில் கர்ப்பமடைந்த சிறுமிக்கு 7-வது மாத நிறைவில் கடும் வயிற்று வலி ஏற்பட்டது. உடனே பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அந்த சிறுமி அனுமதிக்கப்பட்டார். அங்கு பிரசவம் பார்ப்பதில் சிக்கல் ஏற்பட்டதால், அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அந்த சிறுமி அனுமதிக்கப்பட்டார். அங்கு அந்த சிறுமிக்கு இறந்த நிலையில் பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து சுரேஷ்குமார், உயிரிழந்த பெண் சிசுவை அரசு மருத்துவமனை அருகில் உள்ள ஏரிக்கரையின் அருகே புதைத்தார்.
கைது
இதுகுறித்த தகவல் பெரம்பலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்துக்கு கிடைத்தது. இந்த சம்பவம் குறித்து, குழந்தைகள் பாதுகாப்பு நன்னடத்தை அலுவலர் கோபிநாத் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலையரசி, சுரேஷ்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் நேற்று கைது செய்தார். பின்னர் சுரேஷ்குமாரை போலீசார் ஏரிக்கரைக்கு அழைத்து சென்றனர். அங்கு பெண் சிசுவை புதைத்த இடத்தில் பெரம்பலூர் தாசில்தார் பாரதிவளவன் முன்னிலையில், உடல் தோண்டிஎடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அதே இடத்திலேயே அரசு மருத்துவமனை டாக்டர்களை கொண்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு மீண்டும் புதைக்கப்பட்டது.