நன்னிலம் அருகே காரில் கடத்தப்பட்ட 1,144 மதுபாட்டில்கள் பறிமுதல்
நன்னிலம் அருகே காரில் கடத்தப்பட்ட 1,144 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
நன்னிலம்,
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விசித்ராமேரி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலு மற்றும் போலீசார் நன்னிலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். ஆண்டிபந்தல் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக வந்த ஒரு காரை போலீசார் வழிமறித்தனர். ஆனால் அந்த கார் நிற்காமல் வேகமாக சென்றது.
இதையடுத்து போலீசார் அந்த காரை விரட்டி சென்று நன்னிலம் அருகே மகிழஞ்சேரி என்ற இடத்தில் வழிமறித்தனர். பின்னர் அந்த காரை சோதனையிட்டனர். அப்போது புதுச்சேரியில் இருந்து 1,144 மதுபாட்டில்களை காரில் கடத்தி சென்றது தெரியவந்தது.
கார் பறிமுதல்
காரில் 10-க்கும் மேற்பட்ட அட்டை பெட்டிகளில் இருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், காரை ஓட்டி வந்த நபரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர் உபயவேதாந்தபுரம் பகுதியை சேர்ந்த கந்தன் (வயது38) என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மதுபாட்டில்களை கடத்த பயன்படுத்தப்பட்ட கார் பறிமுதல் செய்யப்பட்டது.
முத்துப்பேட்டை
அதேபோல முத்துப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் நேற்று பழைய பஸ் நிலையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நாகப்பட்டினத்தில் இருந்து பட்டுக்கோட்டை நோக்கி சென்ற அரசு பஸ்சில் போலீசார் சோதனையிட்டனர்.
அப்போது அந்த பஸ்சில் இருந்த வாலிபர் ஒருவர் அட்டை பெட்டி வைத்திருந்தார். அந்த பெட்டியை போலீசார் சோதனையிட்டபோது அதில் 100 மதுபாட்டில்கள் இருந்தன. இதையடுத்து அந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை மேற் கொண்டனர்.
கைது-பறிமுதல்
விசாரணையில் அவர் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே உள்ள அமரஅடக்கி துள்ளானி கிராமத்தை சேர்ந்த அழகர் (வயது33) என்பதும், புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்களை அரசு பஸ்சில் கடத்தி வந்ததும் தெரியவந்தது.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அழகரை கைது செய்தனர். அவரிடம் இருந்த 100 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.