பெரியார், எம்.ஜி.ஆர். நினைவு தினம்: சிலைகளுக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து அஞ்சலி

பெரியார், எம்.ஜி.ஆர். நினைவு தினத்தையொட்டி அவர்களது சிலைகளுக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

Update: 2019-12-24 22:45 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூரில் தந்தை பெரியாரின் நினைவு தினத்தையொட்டி கலைஞர் பகுத்தறிவு பாசறை, திராவிடர் கழகம் மற்றும் பகுத்தறிவாளர் கழகம் சார்பில் தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ஓவியர் முகுந்தன் தலைமையில், பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் திராவிடர் கழக நகர தலைவர் அக்ரிஆறுமுகம், பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர்கள் மற்றும் தி.மு.க. திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழக பிரமுகர்கள், பெரியார் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

எம்.ஜி.ஆர். நினைவுதினம்

இதேபோல் பெரம்பலூரில் எம்.ஜி.ஆர். நினைவுதினம் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதனையொட்டி அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் பெரம்பலூர் புறநகர் பஸ்நிலையம் அருகே உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதற்கு மாவட்ட செயலாளரும், குன்னம் எம்.எல்.ஏ.வுமான அரணாரை ஆர்.டி.ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். கட்சி செய்தி தொடர்பாளரும், வழக்கறிஞர் அணி மாநில பொறுப்பாளருமான குறளார் கோபிநாதன் கலந்து கொண்டு எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்தார். இதில் பெரம்பலூர் எம்.எல்.ஏ. இளம்பை தமிழ்ச்செல்வன், உள்ளாட்சி தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் வரகூர் அருணாசலம், வெண்பாவூர் தேவராஜன், மாவட்ட பொருளாளர் பூவை.செழியன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் எம்.என்.ராசாராம், ஒன்றிய செயலாளர்கள் புதுவேட்டக்குடிகிரு‌‌ஷ்ணசாமி, என்.கே.கர்ணன், சிவபிரகாசம் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

அரியலூரில்...

அரியலூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தமிழக முன்னாள் முதல்- அமைச்சர் எம்.ஜி.ஆரின் நினைவு நாள் மற்றும் மவுன ஊர்வலம் நடந்தது. இதில் எம்.பி.கோவில் தெருவில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அலங்கரிக்க பட்ட படத்துடன் மவுன ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலமானது தேரடி, மார்க்கெட் தெரு வழியாக சென்று பஸ் நிலயம் அருகே உள்ள பெரியார் சிலை அருகே முடிவடைந்தது. பின்னர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் முன்னாள் எம்.எல்.ஏ. சமரசம், மாவட்ட கவுன்சில் வேட்பாளர் சந்திரசேகர், மாணவர் அணி மாவட்ட செயலாளர் சங்கர், ஒன்றிய செயலாளர் செல்வராசு, நகர செயலாளர் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதேபோல் அரியலூர் பஸ் நிலையம் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு, திராவிடர் கழகம் சார்பில் டாக்டர் வசந்தா தலைமையில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும் செய்திகள்