மாணவிக்கு பாலியல் தொந்தரவு; போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது
மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
மலைக்கோட்டை,
திருச்சி அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் பிரதீப் (வயது 21). கூலித்தொழிலாளியான இவர் 16 வயது மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மாவட்ட குழந்தைகள் நலக்குழுவுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து மாவட்ட குழந்தைகள் நலக்குழுவினர் கோட்டை அனைத்து மகளிர் போலீசாருடன் இணைந்து சம்பவ இடத்துக்கு சென்று மாணவியை மீட்டனர். இது குறித்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி போக்சோ சட்டத்தின் கீழ் பிரதீப் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தார்.