அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக அமைச்சர் கடம்பூர் ராஜூ- நடிகர் கருணாஸ் வாக்கு சேகரிப்பு

அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக அமைச்சர் கடம்பூர் ராஜூ, நடிகர் கருணாஸ் ஆகியோர் வாக்கு சேகரித்தனர்.;

Update: 2019-12-23 23:00 GMT
கோவில்பட்டி, 

ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக, அ.தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளரும், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சருமான கடம்பூர் ராஜூ, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் நடிகர் கருணாஸ் ஆகியோர் கோவில்பட்டி மூப்பன்பட்டி, இலுப்பையூரணி உள்ளிட்ட பகுதிகளில் திறந்த ஜீப்பில் சென்று வாக்கு சேகரித்தனர். அவர்களுக்கு வழிநெடுகிலும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பெண்கள் ஆரத்தி எடுத்தும், குலவையிட்டும் வரவேற்றனர்.

முக்குலத்தோர் புலிப்படை மாவட்ட செயலாளர் பெருமாள், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் அழகர்சாமி, அ.தி.மு.க. நகர செயலாளர் விஜய பாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ஓட்டப்பிடாரம் ஒன்றியத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ, அ.தி.மு.க. சார்பில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசும்போது, நாங்கள் செய்த சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்டுக்கொண்டிருக்கிறோம். எதிர்அணியில் அப்படியில்லை. அதனால் உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும் என்றார்.

மேலும் செய்திகள்