காமராஜர் மணிமண்டபம் மார்ச் மாதம் திறக்கப்படும் முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு
காமராஜர் மணிமண்டபம் மார்ச் மாதம் திறக்கப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி,
புதுச்சேரி நாடார் உறவின்முறைச் சங்கத்தின் 50-வது ஆண்டு பொன்விழா நேற்று காலை முத்தியால்பேட்டையில் உள்ள செண்பகா ஓட்டலில் நடந்தது. விழாவிற்கு புதுச்சேரி வர்த்தக சபை தலைவரும், நாடார் உறவின் முறை சங்க தலைவருமான செண்பகராஜன் தலைமை தாங்கினார். செயலாளர் மாரிமுத்து ஆண்டறிக்கை வாசித்தார்.
பொருளாளர் நித்தியானந்தம் வரவு-செலவு கணக்கு வாசித்தார். அவைத்தலைவர் பழனிவேல் வரவேற்று பேசினார். விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு பொன்விழா மலரை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
மத்திய மந்திரியிடம் வலியுறுத்துவேன்
புதுவை மாநிலத்தில் நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து வருகிறோம். ஒருவருக்கு ஒரு பிரச்சினை என்றால் அனைவரும் ஒன்று சேர்ந்து நிற்கிறோம். சென்னையில் இருந்து தென்மாநிலத்திற்கு செல்லும் அனந்தபுரி, பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில்களில் புதுவையில் இருந்து 3 பெட்டிகளை இணைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
நான் மத்திய மந்திரியாக இருந்தபோது புதுவையில் இருந்து வெளிமாநிலங்களுக்கு அதிக ரெயில்களை கொண்டு வந்தேன். கடந்த 5 ஆண்டுகளில் புதுவையில் இருந்து புதிதாக ஒரு ரெயில்கூட வரவில்லை. உங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மத்திய மத்திரியிடம் வலியுறுத்துவேன்.
மார்ச் மாதம் திறக்கப்படும்
காமராஜர் மணிமண்டபம் அமைக்கும் பணி அனைத்தும் முடிவடைந்து விட்டது. வருகிற மார்ச் மாதம் அந்த கட்டிடம் திறக்கப்படும். அதில் புதுவை அரசு சார்பில் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் மற்றும் நூலகம் அமைக்கப்படும். நான் புதுவை மாநில முதல்-அமைச்சராக பொறுப்பேற்கும் முன்பு சட்டம்-ஒழுங்கு மோசமாக இருந்தது. வியாபாரிகள், தொழிலதிபர்கள், கடை வைத்திருப்பவர்களை மிரட்டி ரவுடிகள் பணம் பறித்து வந்தனர்.
முதல்-அமைச்சராக பொறுப்பேற்றவுடன் காவல்துறை தலைவரை அழைத்து வியாபாரிகளை மிரட்டி பணம் பறிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டேன். அதன்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே தற்போது புதுவை அமைதியாக உள்ளது.
அரசின் கடமை
புதுவை மாநிலத்தில் சுற்றுலா வேகமாக வளர்ந்து வருகிறது. தற்போது 1700-க்கும் மேற்பட்ட ஓட்டல்கள் புதுவையில் உள்ளன.. இங்கு இத்தாலி, கொரியா, பிரான்ஸ், சீனா, அமெரிக்கா உள்ளிட்ட அனைத்து நாட்டு உணவு வகைகளும் கிடைக்கின்றன. புதுவை மாநிலத்தில் வேலைவாய்ப்பை பெருக்க தகவல் தொழில்நுட்ப பூங்கா விரைவில் அமைக்கப்படும்.
மருத்துவம், கல்வி, சமூக பாதுகாப்பு, சுகாதாரம், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டியது அரசின் கடமை. அதனை செய்து வருகிறோம். நமது அண்டை மாநிலமான தமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறை வந்த போதும் புதுவையில் தட்டுப்பாடு ஏற்படவில்லை. அனைத்து சமுதாய மக்களுக்கும் கிடைக்க வேண்டிய உரிமைகளை கொடுப்பது அரசின் கடமை.
இவ்வாறு அவர் கூறினார்.
பட்டிமன்றம்
விழாவில் மதுரை நாடார் மகாஜன சங்க பொதுச்செயலாளர் கரிக்கோல் ராஜ், சென்னை நாடார் பேரவை தலைவர் எர்ணாவூர். நாராயணன், சிவநேசன் குரூப் ஆப் கம்பெனி நிர்வாக இயக்குனர் சிவநேசன், திண்டிவனம் வட்டார நாடார் சங்க தலைவர் ரமேஷ், விழுப்புரம் நாடார் உறவின் முறை தலைவர் நித்தியானந்தம், புதுச்சேரி சான்றோர் குல கிராமணியார் தரும பரிபாலன சபை தலைவர் சாமிநாதன், பவர் சோப் நிறுவன நிர்வாக இயக்குனர் தனபால், பொன்வண்டு சோப் நிறுவன நிர்வாக இயக்குனர் சரவணன் மற்றும் நாடார் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து நேற்று மதியம் குடும்ப முன்னேற்றத்திற்கு பெரிதும் காரணம் கணவனின் சம்பாத்தியமா மனைவியின் சாமர்த்தியமா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. இதற்கு நாகர்கோவில் நடராஜன் நடுவராக இருந்தார். கணவனின் சம்பாத்தியமா என்ற தலைப்பில் புதுக்கோட்டை மகாசுந்தர், நாகர்கோவில் ராஜ்குமார் ஆகியோரும், மனைவியின் சாமர்த்தியமா என்ற தலைப்பில் நெல்லை ராஜராஜேஸ்வரி, ராஜபாளையம் கவிதா ஜவகர் ஆகியோரும் பேசினர். முடிவில் புதுச்சேரி நாடார் உறவின் முறை சங்க துணைத் தலைவர் பால்ராஜ் நன்றி கூறினார்.
தீர்மானங்கள்
நாடார் கிராமணி இனத்தவரை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும்; காமராஜர் மணி மண்டபத்தை விரைவில் முடித்து திறக்க வேண்டும்;. காமராஜர் சிலையை வெண்கல சிலையாக மாற்றி அதற்கு நிழற்குடை வைத்து நிரந்தர படிக்கட்டு கட்ட வேண்டும்; தென்மாவட்டத்திற்கு செல்லும் அனந்தபுரி, பொதிகை விரைவு ரெயில்களில் புதுவையில் இருந்து தலா 3 பெட்டிகள் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; விழுப்புரத்தில் இருந்து புறப்படும் வடமாநில ரெயில்களை புதுவை வரை நீட்டிக்க வேண்டும் என்பவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.