சுங்குவார்சத்திரம் பஜார் பகுதியில் கொட்டப்படும் குப்பைகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
சுங்குவார்சத்திரம் பஜார் பகுதியில் கொட்டப்படும் குப்பைகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஸ்ரீபெரும்புதூர்,
ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தை சேர்ந்த சாந்தவேலூர், மொளச்சூர், திருமங்கலம் போன்ற 3 ஊராட்சிகள் இணையும் பகுதியில் சுங்குவார் சத்திரம் பஜார் பகுதி உள்ளது. இந்த பஜார் பகுதியில் 4 சாலையிலும் கடைகள் வைத்துள்ள வியாபாரிகள் தங்கள் கடையில் சேரும் குப்பைகள், கழிவுகள் போன்றவற்றை சாலையில் கொட்டுகின்றனர். இந்த குப்பைகளால் துர்நாற்றம் வீசுவதால் அந்த பகுதியை பொதுமக்கள் மூக்கை பிடித்து கொண்டு கடந்து செல்லும் நிலையில் உள்ளனர்.
3 ஊராட்சிகள் சேரும் இடத்தில் இந்த பஜார் பகுதி இருந்தும் ஊராட்சி நிர்வாகத்தினர் அலட்சியத்தால் குப்பையை அகற்றாமல் உள்ளனர். சாலையில் ஆங்காகே கழிவு நீர் ஆறாக ஓடுகிறது. உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.