பெருமாநல்லூர் பகுதிகளில் கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் அவதி

பெருமாநல்லூர் பகுதிகளில் கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகிறார்கள்.

Update: 2019-12-21 22:24 GMT
பெருமாநல்லூர்,

பல்வேறு பகுதிகளில் தற்போது குளிர்காலம் நிலவி வருவதால் பனிப்பொழிவு அதிகளவில் உள்ளது.

இந்த பனிப்பொழிவானது காலை எட்டு மணி வரையும் நிலவி வருகிறது. அந்த வகையில் பெருமாநல்லூர் சுற்று வட்டார பகுதிகளான பொங்குபாளையம், கணக்கம்பாளையம், அய்யம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. இந்த பனிப்பொழிவின் காரணமாக சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரிவதில்லை.

இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். மேலும் வாகனங்களில் செல்பவர்கள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி செல்கிறார்கள்.

மேலும் செய்திகள்