கோவில்பட்டியில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 2-ம் கட்ட பயிற்சி

கோவில்பட்டியில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 2-ம் கட்ட பயிற்சி அளிக்கப்பட்டது.;

Update: 2019-12-21 22:00 GMT
கோவில்பட்டி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகிற 27, 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடக்கிறது. இதையொட்டி கோவில்பட்டி லட்சுமி மில் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில், வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 2-ம் கட்ட பயிற்சி நேற்று நடந்தது. கூட்டுறவு துணை பதிவாளர் ஜெயசீலன் தலைமை தாங்கினார்.

யூனியன் ஆணையாளர்கள் மாணிக்கவாசகம், வசந்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குமரன், சுப்பையா, ஜவகர் ஆகியோர் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி அளித்தனர். வாக்குச்சாவடியில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள், வாக்குப்பதிவின்போது மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விளக்கி கூறப்பட்டது. இதில் சுமார் 900 வாக்குச்சாவடி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதற்கிடையே கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா, வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சியை பார்வையிட்டார். பின்னர் அவர், லட்சுமி மில் மேல்நிலைப்பள்ளியில் வாக்கு எண்ணும் மையம், வாக்குச்சீட்டுகள், வாக்குச்சீட்டு பெட்டிகள் வைப்பறை உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதேபோல் கயத்தாறு பாபா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 2-ம் கட்ட பயிற்சி நேற்று நடந்தது. தாசில்தார் பாஸ்கரன் தலைமை தாங்கினார். மண்டல துணை தாசில்தார் மாடசாமி, தேர்தல் துணை தாசில்தார் அங்கையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

யூனியன் ஆணையாளர்கள் சீனிவாசன், சசிகுமார் ஆகியோர் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி அளித்தனர். வாக்குச்சாவடியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விளக்கி கூறப்பட்டது.

மேலும் செய்திகள்