குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு: ஏரலில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஏரல் வட்டார அனைத்து முஸ்லிம் ஜமாத் சார்பில், ஏரல் காந்தி சிலை அருகில் நேற்று மாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஏரல்,
ஏரல் ஜமாத் தலைவர் பாக்கர் அலி தலைமை தாங்கினார். ஜமாத் தலைவர்கள் அப்துல் ரஹீம் (சூளைவாய்க்கால்), ஜிந்தாகனி (சிறுத்தொண்டநல்லூர்), நிஜாமுதீன் (சேதுக்குவாய்த்தான்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் ஏரல் வட்டார அனைத்து முஸ்லிம் ஜமாத் நிர்வாகிகள், த.மு.மு.க., தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், எஸ்.டி.பி.ஐ. உள்ளிட்ட கட்சியினர் உள்பட திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.