சேலம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம்
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.
சேலம்,
சேலம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற 27 மற்றும் 30-ந் தேதி இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. 29 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள், 288 ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிகள், 385 கிராம ஊராட்சி தலைவர்கள், 3,597 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிகள் என மொத்தம் 4 ஆயிரத்து 299 பதவிகளுக்கு 13 ஆயிரத்து 923 பேர் போட்டியிடுகிறார்கள்.
இந்தநிலையில், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அவர்களது கட்சிகளை சேர்ந்த சின்னங்களுடன் வாக்குச்சீட்டுகள் அச்சிடும் பணிகள் மாவட்டம் முழுவதும் 11 அச்சகங்களில் நடைபெற்று வருகின்றன. இதுதவிர, வாக்கு எண்ணிக்கை நடக்கும் மையங்களில் தேவையான முன்னேற்பாடு பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
ஆலோசனை கூட்டம்
இந்தநிலையில், சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று உள்ளாட்சி தேர்தல் குறித்து முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட தேர்தல் பார்வையாளரும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குனருமான காமராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் ராமன் முன்னிலை வகித்தார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அருள்ஜோதி அரசன், மாநகர போலீஸ் துணை கமிஷனர் தங்கதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், சேலம் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் வருகிற 27 மற்றும் 30-ந் தேதி இரண்டு நாட்கள் நடைபெறும் உள்ளாட்சி தேர்தலை அமைதியான முறையில் நடத்துவது குறித்தும், தேவையான இடங்களில் போலீஸ் பாதுகாப்பு அளிப்பது குறித்தும், வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் தயார் நிலையில் வைத்திருப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும், பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்டறிந்து அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும்.தேர்தல் சம்பந்தமாக புகார்கள் வந்தால் அதன் மீது உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாவட்ட தேர்தல் பார்வையாளர் காமராஜ் உத்தரவிட்டார்.