தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பு நடைபெற்றது.;

Update: 2019-12-21 22:30 GMT
ஜெயங்கொண்டம்,

அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் வட்டார ஜமாத்துல் உலமா சபை, அனைத்து மஹல்லா ஜமாத்துக்கள் இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் தி.மு.க. மற்றும் அதன் தோழமை கட்சிகள் சார்பில் தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பு நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஐக்கிய ஜமாத் மாவட்ட செயலாளர் முகமது ஷெரீப் தலைமை தாங்கினார். மனிதநேய ஜனநாயக கட்சி மாநில பொருளாளர் ஹாரூன்ர‌ஷீத், தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவசங்கர், மாநில சட்ட திட்ட திருத்த குழு உறுப்பினர் சுபாசந்திரசேகர், ஜெயங்கொண்டம் தலைமை இமாம் சைபுதீன், ஜமாத்துல் உலமா தலைவர் காஜாமைதீன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி பல்வேறு கோ‌‌ஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. நகர செயலாளர் கருணாநிதி, ம.தி.மு.க. மாவட்ட பொருளாளர் புகழேந்தி, த.மு.மு.க. மாவட்ட செயலாளர் முஸ்தபா, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் கமாலுத்தீன், மாவட்ட செயலாளர் சாகுல் ஹமீது, தி.க. மண்டல தலைவர் காமராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்