மும்பை-நாக்பூர் விரைவு சாலைக்கு பால் தாக்கரே பெயர்; அரசாணை வெளியீடு

மும்பை-நாக்பூர் விரைவு சாலைக்கு பால் தாக்கரே பெயரை சூட்டுவதற்கு அரசாணை வெளியானது.

Update: 2019-12-20 23:47 GMT
மும்பை, 

மும்பையுடன் நாக்பூரை இணைக்கும் வகையில் 701 கிலோ மீட்டர் தூரத்துக்கு 8 வழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சாலை 10 மாவட்டங்கள், 26 தாலுகாக்கள், 390 கிராமங்கள் வழியாக செல்கிறது. இதற்காக ரூ.46 ஆயிரம் கோடி செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த சாலை அமைந்தால் மும்பை-நாக்பூர் இடையேயான பயணம் 8 மணி நேரம் மிச்சமாகும்.

இந்தநிலையில் மும்பை-நாக்பூர் விரைவு சாலைக்கு மறைந்த சிவசேனா நிறுவனர் பால்தாக்கரே பெயர் சூட்டவேண்டும் என அக்கட்சியினர் வலியுறுத்தி வந்தனர்.

கடந்த 11-ந்தேதி நடந்த மந்திரி சபை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, மும்பை-நாக்பூர் விரைவு சாலைக்கு பால்தாக்கரே பெயர் சூட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்தநிலையில் அந்த சாலைக்கு ‘இந்து ஹிருதே சாம்ராட் பாலாசாகேப் தாக்கரே மகாராஷ்டிர சம்ருதி மகாமார்க்' என்று பால்தாக்கரே பெயரிடப்படும் என நேற்று மராட்டிய அரசு அரசாணை வெளியிட்டது.

மேலும் செய்திகள்