பிரதமர் மோடியின் தம்பி கன்னியாகுமரி வருகை ; பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்

பிரதமர் ேமாடியின் தம்பி பங்கஜ் மோடி. இவர் தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார். இந்தநிலையில் கன்னியாகுமரிக்கு நேற்றுமுன்தினம் பங்கஜ்மோடியும், அவரது உறவினர்களும் வந்தனர்.

Update: 2019-12-20 23:03 GMT

கன்னியாகுமரி, 

கன்னியாகுமரி வந்த பங்கஜ்மோடி மற்றும் அவரது உறவினர்களை பா.ஜனதா நிர்வாகிகள் சுபாஷ், கனகராஜன், ஆர்.எஸ்.எஸ். பொறுப்பாளர் முருகன் உள்பட பலர் வரவேற்றனர்.

நேற்று காலை பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். கோவிலில் உள்ள கால பைரவர் சன்னதி, ஆஞ்சநேயர், பகவதி அம்மன் மூலஸ்தானம், சவுந்தரி அம்மன், இந்திர காந்த விநாயகர், பால சவுந்தரியம்மன், ஸ்ரீதர்ம சாஸ்தா அய்யப்பன், சூரிய பகவான், நாகராஜா சன்னதிகளுக்கு சென்று வழிபட்டார். அதைத் தொடர்ந்து திரிவேணி சங்கமத்துக்கு சென்று கடல் அழகை ரசித்தார். 

பின்னர், காந்தி மண்டபம், விவேகானந்தர் மண்டபம், வெங்கடாசலபதி கோவில், விவேகானந்தபுரத்தில் உள்ள பாரதமாதா கோவில், ராமாயண சித்திர கூடம், தெற்கு குண்டலில் உள்ள ஒரு ஆசிரமத்துக்கும் சென்றார்.

மேலும் செய்திகள்