உள்ளாட்சி தேர்தல்: குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல்

உள்ளாட்சி தேர்தலுக்கான குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலை எச்.வசந்தகுமார் எம்.பி. வெளியிட்டார்.

Update: 2019-12-20 22:37 GMT
நாகர்கோவில், 

நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் குமரி கிழக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிடுகிற காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை நேற்று நாகர்கோவிலில் எச்.வசந்தகுமார் எம்.பி., பிரின்ஸ் எம்.எல்.ஏ., கிழக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் வெளியிட்டனர்.

பின்னர் வசந்தகுமார் எம்.பி. நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

குமரி கிழக்கு மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் இணைந்து போட்டியிடுகின்றன. குமரி கிழக்கு மாவட்டத்தில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் போட்டியிடுகிற வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

மாவட்ட பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு ராஜாக்கமங்கலம் ஒன்றியத்தில் உள்ள 10-வது வார்டுக்கு ஈத்தாமொழி அருகே உள்ள புதுக்குடியிருப்பை சேர்ந்த தங்கம், அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்தில் உள்ள 11-வது வார்டுக்கு ராமபுரம் அருகே உள்ள ஆண்டார்குளத்தை சேர்ந்த சாம் மோகன்ராஜ் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கு ராஜாக்கமங்கலம் ஒன்றியத்தில் 2-வது வார்டுக்கு புத்தேரி முத்தாரம்மன் கோவில் ெதருவை சேர்ந்த பெருமாள்பிள்ளை, 5-வது வார்டுக்கு அனந்தநாடார்குடியிருப்பு காரவிளையை சேர்ந்த ராஜகுமாரி, 9-வது வார்டுக்கு பொட்டல் பிள்ளையார்புரத்தை சேர்ந்த பூவதி, தக்கலை தெற்கு ஒன்றியத்தில் 1-வது வார்டுக்கு ஆலத்துறை கைசாலவிளையை சேர்ந்த கிறிஸ்டி ஜெகதா, 5-வது வார்டுக்கு நெய்யூர் தச்சன்பரம்பு பகுதியை சேர்ந்த கோல்டன் மெல்பா, 10-வது வார்டுக்கு காரங்காடு நுள்ளிவிளையை சேர்ந்த சகாய அருள் ஜெகனும் போட்டியிடுகின்றனர்.

தோவாளை ஒன்றியத்தில் 2-வது வார்டுக்கு காட்டுப்புதூர் பூமணி நகரை சேர்ந்த செல்வராஜ், 8-வது வார்டுக்கு மாதவலாயம் அனந்தபத்மநாபபுரம் பகுதியை சேர்ந்த ரவி, அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்தில் 3-வது வார்டுக்கு வடக்கு தாமரைக்குளம் பெருமாள்புரத்தை சேர்ந்த பாமா, 4-வது வார்டுக்கு சாமிதோப்பு வடக்குரதவீதியை சேர்ந்த ஜெனிதா, 7-வது வார்டுக்கு வட்டக்கோட்டை கே.வி.கே.நகரை சேர்ந்த ராஜேஷ், குருந்தங்கோடு ஒன்றியத்தில் 1-வது வார்டுக்கு தெற்கு காரங்காடு நெட்டாங்கோடு பகுதியை சேர்ந்த கலா, 3-வது வார்டுக்கு கட்டிமாங்கோடு பகுதியை சேர்ந்த சுகன்யா தேவி, 5-வது வார்டுக்கு வெள்ளிச்சந்தை அருகே வெள்ளமோடியை சேர்ந்த காமராஜ், 6-வது வார்டுக்கு குருந்தங்கோடு முக்கலம்பாடு பகுதியை சேர்ந்த மேரிபுஷ்ப ராணி, 8-வது வார்டுக்கு வாணியக்குடி அன்பியத்தை சேர்ந்த எனல்ராஜ், 10-வது வார்டுக்கு கடியப்பட்டணத்தை சேர்ந்த மார்ட்டின் போட்டியிடுகிறார்கள்.

அந்த வகையில் காங்கிரஸ் சார்பில் மாவட்ட பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 பேரும், ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 17 பேரும் போட்டியிடுகின்றனர்.

இவ்வாறு எச்.வசந்தகுமார் எம்.பி. கூறினார்.

மேலும் செய்திகள்