குடியுரிமை சட்டத்தை எதிர்க்கும் கட்சிகளை கண்டித்து பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடியில் குடியுரிமை சட்டத்தை எதிர்க்கும் கட்சிகளை கண்டித்து பா.ஜனதாவினர் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்ட பா.ஜனதா கட்சி சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்தும், மசோதாவை எதிர்த்து போராட்டம் நடத்தும் கட்சிகளை கண்டித்தும் தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ்நிறுத்தம் அருகே நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் பாலாஜி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாநில துணைத்தலைவர் நாகராஜன் கலந்து கொண்டு பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் குடியுரிமை சட்டம் குறித்து விளக்கி கூறினர். இந்த சட்டத்தை எதிர்த்து போராடும் கட்சியினரை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொதுச்செயலாளர்கள் ராமமூர்த்தி, சிவராமன், பாலாஜி, மாரியப்பன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் சந்தணகுமார், மாவட்ட துணைத்தலைவர்கள் பால்ராஜ், போஸ், செல்வராஜ், பரமேசுவரி, மாவட்ட செயலாளர் வீரமணி, நாராயணன், சிவமுருக ஆதித்தன், சட்டமன்ற பொறுப்பாளர் பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.